Raja Gopurams in Nov-2011

குமர கோயில்


மெய்கண்டமூர்த்தி சுவாமி திருக்கோயில் - நாகபட்டினம்  
காலம் முழுதும் கந்தற்கே கவிகள் அறைந்த்துய்த் தவரென்றிஞ், ஞாலம் இறைஞ்சும் அருணகிரி நாதர் திருவாய் மலர்ந்தநறும்,
சீலம் மிகுசந் தக்
கவிகள் தெரித்துப் பரவி மெய்கண்ட, வேலன் அருளுக்காளான மேலோர் பலர்வாழ் வதுநாகை

தல வரலாறு
பாடல்கள்
நிகழ்வுகள்
புகைப்படங்கள்
ஆவணங்கள்
செல்வது எப்படி
அருகாமையில்
இணைய முகவரிகள்

Meikanda Moorthy

வணக்கம். நல்வரவு.

சிவராஜதானி என்று அழைக்கப்பெறுவதும் சப்தவிடங்க தலங்களில் ஒன்றானதுமான நாகபட்டினம், தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு தெற்கே சுமார் 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தொன்மையான கடற்கரை நகரமாகும்.

இந்நகரின் மையப் பகுதியில், நீலா தெற்கு வீதியில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப்பெருமான் அருள்மிகு மெய்கண்ட மூர்த்தி ஆலயத்தின் புகழ்கூறும் வலைத்தளம் இது.

குமரகோயில் என்று இவ்வூராரால் அழைக்கப்படும் இவ்வாலயம், கி.பி 1750 ஆம் ஆண்டுவாக்கில் அன்றைய புதுச்சேரியில் பிரெஞ்சு ஆளுனரின் துபாஷியாகப் பணியாற்றிவந்த ஆனந்த ரெங்கம் பிள்ளையால் அமைக்கப்பெற்றதாகும். 

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்வாலயத்தில் மெய்க்காவலராக பணிபுரிந்த அழகுமுத்து என்பவருக்கு அருள்மிகு மெய்கண்ட மூர்த்தி நேரில் தோன்றி உணவளித்து பசிநீக்கி, அவரின் தொழுநோய் நீக்கி பின் பாடும் வரமளித்ததாக வரலாறு. 

இருநூற்று அய்ம்பது வருடங்களுக்கும் மேலாக பழைமை வாய்ந்த இக்கோயிலின் தலவரலாறு, பெருமைகள், பாடல்கள், புகைப்படங்கள் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கிய இவ்வலைத்தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.

இவ்வாலயம் தொடர்பான, இத்தளத்தில் இடம்பெறாத தகவல்கள், புகைப்படங்கள், மற்றும் புத்தகங்கள் ஏதேனும் தங்களிடம் இருந்தால் அவற்றை இவ்வலைத்தளம் மூலமாக பகிர்ந்து கொள்ளுமாறு பணிவோடு வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்.

Home Contact